ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோயில் விழாவின் நிறைவு நாளான நேற்று காலை அம்பாள் திருத்தேரில் எழுந்தருள,அர்ச்சகர் ஹரிஹரன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். 10.20 மணிக்கு தேரினை திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.கோயிலை சுற்றிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. பக்தர்கள் தேங்காய், பழம் உடைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிப்பட்டனர். ஏற்பாடுகளை தக்கார் ராமராஜா, செயல்அலுவலர் அறிவழகன் தலைமையில் அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர். நகர் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.