செஞ்சி:விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம், நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக காலையில், அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இரவு, 11:00 மணிக்கு, அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார்.