ராமநாதபுரம்: ராமநாதபுரம் சேதுபதி நகர் மல்லம்மாள் காளியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா நாளை காலை நடக்கிறது.விழாவையொட்டி நாளை மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், வாஸ்து சாந்தி, முதல் கால யாகபூஜை, ஹோமம், தீபாராதனை நடக்கிறது. அடுத்த நாள் 11ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விசேஷ அபிஷேகம், வருஷாபிஷேக கும்பஜல அபிஷேகம், மகா தீபாராதனை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.