சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஏப் 2016 11:04
சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, பிடாரியம்மன் கோயிலில் காப்பு கட்டி பக்தர்கள் விரதத்தை துவக்கினர். செப்பேடு புகழ் சின்னமனுார் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான பிடாரியம்மன் காப்பு கட்டு நடந்தது. தக்கார் பாலகிருஷ்ணன், செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தனர். மகாராஜா பட்டர் அம்மனுக்கு காப்பு கட்டினார். அலுவலக கணக்கர் மோகன், தெய்வீகப்பேரவை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏப்.21ல் சுவாமி-அம்மன் திருக்கல்யாணமும், முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.22ல் துவங்கி கண்ணாடி கடை முக்கில் நிலை நிறுத்தப்படும். மறுநாள் தேர் நிலை வந்தடையும். உற்சவர் 18 மண்டகப்படியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி சமுதாயவாரியாக நடைபெறும்.