பதிவு செய்த நாள்
09
ஏப்
2016
11:04
திருவாரூர்: திருவாரூர் அருகே, மே, 13ம் தேதி, 81வது வார்ஷீக ஆராதனா மகோத்ஸவ விழா, கோலாகலமாக துவங்குகிறது. திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் மேல அக்ரஹாரத்தில், ஆலங்குடி சுவாமிகள் ஆராதனா ஸபா டிரஸ்ட் இயங்கி வருகிறது. 81வது, வார்ஷீக ஆராதனா மகோத்ஸவ விழா, மே, 13ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை நடக்கிறது. ஸபா டிரஸ்ட் நிறுவனர் ஸ்ரீஸ்ரீகிருஷ்ணபிரேமி சுவாமிகள், தலைவர் சுந்தரம், நிர்வாக பொறுப்பாளர் தண்டபாணி, செயலர் சங்கரநாராயணன், பொருளாளர் ஸ்வாமிநாதன், ஒருங்கிணைப்பாளர்கள் வைத்திய சுப்பிரமணியன், சீனிவாசன், காமாட்சி, கோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்று, மகோத்ஸவ விழாவை நடத்துகின்றனர். அங்குள்ள ப்ரவசன மண்டபத்தில் எழுந்தளியுள்ள ராதிகா ரமண வேணுகோபாலசுவாமி, குருநாதர் சன்னதியில் நடந்து வரும் ஸ்ரீமத் பாகவத ஸப்தாஹ பாராயணத்தில் பங்கேற்க விரும்புவோர், கோசாலைக்கு உதவும் பக்தர்கள், அங்குள்ள ரகுபதி அய்யரை, 619, மேல அக்ரஹாரம், முடிகொண்டான், திருவாரூர் மாவட்டம், 609 502 என, டிரஸ்ட் விலாசத்தில் கடிதம் மூலமாகவும், 04366 - 230142 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, டிரஸ்ட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.