குறுக்குத்துறை கோயிலில் செப்.2ல் ஆவணி தேர்த்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2011 11:08
திருநெல்வேலி : குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி தேர்த்திருவிழா வரும் செப்.2ம்தேதி காலை கொடியேற்றுத்துடன் துவங்குகிறது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி தேர்த்திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு தேர்த்திருவிழா வரும் செப்.2ம்தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றுத்துடன் துவங்குகிறது. வரும் 8ம்தேதி காலை 5 மணிக்கு முருகனின் உருகுச்சட்ட சேவையும், மாலை 5 மணிக்கு ஆறுமுகப் பெருமாள் தங்க சப்பரத்தில் சிகப்பு சாத்தி நெல்லை எழுந்தருளும் நகிழ்ச்சியும் நடக்கிறது. 9ம் தேதி காலை 6 மணிக்கு வெள்ளைச்சாத்தியும், மாலை 6 மணிக்கு பச்சை சாத்தியும் நடக்கிறது. வரும் 11ம்தேதி காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு ஏழு வண்ண பல்லக்கு நிகழ்ச்சியும், 12ம்தேதி மதியம் 12 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு வெள்ளி மயில் வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது. 13ம்தேதி காலை 10. 30 மணிக்கு சுவாமி, டவுன் எஸ்.என். ஹைரோட்டில் உள்ள தெப்ப மண்டபத்திற்கு எழுந்தருளல் மற்றும் அபிஷேகம் நடக்கிறது. இரவு மின் விளக்குடன் தெப்பத் திருவிழா நடக்கிறது.