பதிவு செய்த நாள்
30
ஆக
2011
11:08
திருநெல்வேலி : பாளை., கே.டி.சி.நகர் செல்வவிநாயகர் கோயிலில் 5ம் ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை (31ம் தேதி) மற்றும் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. பாளை., கே.டி.சி.நகர் வடக்குப்பகுதி செல்வவிநாயகர் கோயில் 5ம் ஆண்டு வருஷாபிஷேக விழா (31ம் தேதி) காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. கும்ப ஜெபம், ருத்ர ஜெபம், மகாலெட்சுமி பூஜை, தன பூஜை, கோ பூஜைகள் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கோபுர கலச பூஜைகள், மகாபிஷேகம், 108 சங்காபிஷேக பூஜைகள், கும்ப அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பரமாத்மா, ஜீவாத்மா பற்றி நீலகண்டன் பேசுகிறார். மதியம் 12.30 மணிக்கு மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. இரவு 7 மணிக்கு பெருங்குளம் செங்கோல் ஆதீனம் கல்யாண சுந்தர சத்திய ஞான பண்டார சன்னிதி சுவாமிகள் அருளாசி வழங்குகிறார். இரவு 8 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி பூஜைகள் 1ம் தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் நடக்கிறது. ஏற்பாடுகளை அர்ச்சகர் கண்ணன், கே.டி.சி.நகர் வடபகுதி ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.