பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
12:04
பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் தர்ம சாஸ்தா கோயில் கும்பாபிஷேகம் பக்தர்களின் சரண கோஷம் முழங்க கோலாகலமாக நடந்தது.
இக்கோயிலில் மகாகும்பாபிஷேக விழா ஏப்.9 ல் துவங்கியது. அன்று காலை 8 மணிக்கு மகாலட்சுமி, கன்யா, சுமங்கலி, கோ பூஜைகளும், மாலை 4 மணிக்கு வாஸ்து பூஜையும் நடந்தது. ஏப்.10 காலை 6 மணி முதல் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, முதல் கால யாக பூஜைகள் துவங்கியது. இரவு இரண்டாம் கால யாக பூஜைகளும், பூர்ணாகுதி நடந்தது.நேற்று காலை 9 மணிக்கு யாக பூஜைகளுக்குப் பின்னர் பூர்ணாகுதி நிறைவடைந்து, 9.30 மணிக்கு யாக சாலையில் இருந்து தீர்த்த குடங்கள் புறப்பாடாகின. தொடர்ந்து ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன், விநாயகர், மாளிகை புறத்தம்மன், சந்தான கோபால கிருஷ்ணன், கருப்பண்ணசாமி, நாகர்மேடு, புஷ்கலா தேவி உள்ளிட்ட சுவாமிகளின் விமானங்களுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை தர்மசாஸ்தா சேவா சங்க நிர்வாகிகள், கும்பாபிஷேக கமிட்டியினர் செய்திருந்தனர்.