பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
12:04
பொன்னேரி: பொன்னேரி அடுத்த, தத்தமஞ்சி கிராமத்தில் உள்ள மகாலட்சுமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
பொன்னேரி அடுத்த, தத்தமஞ்சி கிராமத்தில், மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளபட்டு, நேற்று, மகா கும்பாபிஷேகம் நடந்தது. கிராம தேவதை மற்றும் வினாயகர் பூஜைகள், சிறப்பு தீபாராதனைகளுடன் துவங்கியது. பின், மகாலட்சுமி அம்மன், வினாயகர் ஆகிய சன்னிதிகளின் கோபுர கலசங்களுக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில், தத்தமஞ்சி, காட்டூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.