காஞ்சிபுரம் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2016 12:04
காஞ்சிபுரம்:இளையனார் வேலுார், பாலசுப்ரமணிய சுவாமி கோவில் பங்குனி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
காஞ்சிபுரத்தை அடுத்துள்ளது இளையனார் வேலுார் கிராமம். இங்கு, பிரசித்தி பெற்ற பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது; அறநிலையத்துறை பராமரித்து வருகிறது. இக்கோவில் பங்குனி திருவிழா, இன்று காலை, 4:00 முதல், 6:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 23ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏழாம் நாள், தேர் திருவிழாவும், 11ம் நாள் வள்ளி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறும். தினமும் காலை, இரவு சுவாமி ஊர்வலம் நடைபெறும்.