பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
12:04
சேலம்: சேலம் அழகாபுரம் திரவுபதி அம்மன் கோவிலில் நேற்று நடந்த தீ மிதி விழாவில்,
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சேலம் அழகாபுரத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் திருவிழா மார்ச், 25ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 18 நாட்களுக்கு, வாணவேடிக்கையுடன், கட்டளைதாரர்களின் சத்தாபரண ஊர்வலமும், சிறப்பு பூஜைகளும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு முதல், திரவுபதி துகில் உரியும் நிகழ்ச்சி, திரவுபதியிடம் பெண் வீட்டார் சம்பந்தம் பேசும் நிகழ்ச்சி, அரவாண் பலி உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதிவிழா நேற்று மாலை நடந்தது. இதில், அழகாபுரம், காட்டூர், ரெட்டியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர்.