வீரபத்ரசாமி கோவில் தீ மிதி விழா: மலை கிராம மக்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஏப் 2016 12:04
அந்தியூர்: அந்தியூரை அடுத்துள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தாமரைகரை மலைகிராமத்தில் வீரபத்திரசாமி கோவில் உள்ளது. கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 10ம் தேதி பூச்சாட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தன. இந்நிலையில் தாமரைகரை அருகே, ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள மலை குன்றுக்கு, கிராம மக்கள் வன விலங்குகள் போல் மாறுவேடமிட்டு வீரபத்ரசாமியின் உற்சவர் சிலையை ஊர்வலமாக எடுத்து சென்றனர். முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நேற்று காலை நடந்தது. ஏராளமான ஆண், பெண் பக்தர்கள் தீ மிதித்தனர்.