பதிவு செய்த நாள்
13
ஏப்
2016
12:04
பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டன. இவற்றில் மொத்தம், 8 லட்சத்து, 49 ஆயிரத்து, 761 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாக, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. கோவில் வளாகங்களில், 21 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை திறந்து எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் சங்கமேஸ்வரர் கோவில் உண்டியல்களில், 7 லட்சத்து, 64 ஆயிரத்து, 131 ரூபாய், பழனியாண்டவர் கோவிலில், 45 ஆயிரத்து, 90 ரூபாய், காசி விஸ்வநாதர் கோவிலில், 12 ஆயிரத்து, 639 ரூபாய், பசு பராமரிப்புக்கு, 22 ஆயிரத்து, 825 ரூபாய், யானை பராமரிப்புக்கு, 5,096 ரூபாய் என, 8 லட்சத்து, 49 ஆயிரத்து, 761 ரூபாய் பணமாக செலுத்தப்பட்டிருந்தது. இதில்லாமல், 47 கிராம் தங்கம், வெள்ளி, 80 கிராம் செலுத்தப்பட்டிருந்தது. உண்டியல் எண்ணும் பணியில் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பெண்கள், கோவில் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.