ஸ்ரீரங்கநாதரின் அழகை தினமும் ஆயிரக்கணக்கானோர் கண்ணார தரிசிப்பதால் அவருக்குக் கண்திருஷ்டி ஏற்பட்டுவிடுமா என்ன? ஏற்படாது என்றாலும், அன்பின் காரணமாக இச்சடங்கு திருவரங்கம் ரங்கநாதர் கோயிலில் செய்யப்படுகிறது. ஐந்தாவது பிராகாரத்திலுள்ள நாலுகால், மண்டபத்தில் இச்சடங்கு நடத்தப்படும். ஒரு சிறிய குடத்தின் மேல் கிண்ணம் ஒன்றை வைத்து அதில் கனமான திரியிட்டுத் தீபமேற்றி பெருமாளுக்குக் காட்டுவர். இந்தச் சடங்குக்கு திருவந்திக்காப்பு எனப் பெயர்.