கருணைக் கடலாகவும், சந்தானம் நல்குபவளாகவும், புவனத்தாயாகவும், வெண் சண்பகப்பூ மேனியளாகவும், ரத்தின ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளாகவும், தூய்மையானவளாகவும் தேவசேனை என்ற பெயரையுடைவளாகவும் விளங்குகிற தேவியை வணங்குகிறேன்! என்று தியானித்து கலசத்திலோ அல்லது சுவரில் தீட்டிய சித்திரத்திலோ சஷ்டி தேவியை ஆவாஹனம் செய்து தனது சிரசில் மலரை வைத்து மறுபடியும் மூன்று முறை மந்திரத்தை ஜபம் செய்து, பாத்யம், ஆசனம், அர்க்கியம், கந்த புஷ்பம், தாபம், தீபம், பழம் நைவேத்தியங்களோடு பூஜிக்க வேண்டும். ஓம் ஹ்ரீம் சஷ்டி தேவ்யை சுவாஹா என்ற மந்திரத்தைத் தன்னால் இயன்ற அளவு ஜபிக்க வேண்டும். பிறகு சாம வேதத்தில் கூறப்பட்ட தோத்திரத்தினால் சஷ்டி தேவியை துதித்து, பக்தியோடு வணங்க வேண்டும்.