வேலூர் மாவட்டம், ஆரணிக்கு அருகில் வாழைப்பந்தலில் உள்ளது பச்சையம்மன் திருக்கோயில். இக்கோயில் கருவறையில் அம்பிகை பச்சைத் திருமேனியளாய் சுதை வடிவில் காட்சி தருகிறாள். சன்னிதியில் பக்தர்களுக்கு பச்சை நிற குங்குமமே பிரசாதமாக அளிக்கப்படுகிறது. பில்லி, சூனியத்தால், பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கிடைக்க இந்த அம்மனை பிரார்த்தனை செய்து பலனடைகின்றனர்.