ஜோதிட சாஸ்திர ரீதியாக ஜாதகத்தில் இரண்டு, எட்டு ஆகிய இடங்களில் தீய கிரக சேர்க்கை இருந்தால் குடும்ப ஒற்றுமை கெடும். இதற்கு ஜோதிடரிடம் ஆலோசித்து பரிகாரம் செய்யலாம். இது ஒரு விஷயம். இரண்டாவது விட்டுக்கொடுக்கும் தன்மையும் குடும்ப ஒற்றுமையை தக்க வைக்கிறது. மற்றவர்கள் இறங்கி வரட்டும் என்று எண்ணாமல், நாம் முதலில் இறங்கி வந்தாலே பிரச்னை தீர்ந்து விடும். இறங்கி வந்தும் நம்முடன் ஒத்துழைக்காமல் போனால், அவர்களிடமிருந்து விலகிக் கொள்ள வேண்டியது தான். ஒற்றுமைக்கான காலம் கனியும் வரை கடவுளிடம் பொறுப்பை ஒப்படைத்து நிம்மதியாக இருப்பதே நல்லது.