அமாவாசையன்று காகம் உணவை எடுக்கா விட்டால் கெடுதல் ஏதும் ஏற்படுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2016 03:04
சாஸ்திர ரீதியாக சொன்னால் காகம் சாதம் எடுக்காவிட்டால் குறை தான். ஆனால் இக்கால சூழலைக் கருத்தில் கொண்டால் பதில் சொல்வதற்கு சற்று யோசிக்க வேண்டிஉள்ளது. கிராமங்களில் இரு முறை கா கா என்று கூவினாலே காகம் வந்து உணவை உண்ணும். நகரங்களில் காக்கையைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. அதிலும் வெளிநாடுகளில் ரொம்ப கஷ்டப்பட வேண்டியுள்ளது. அங்கிருக்கும் ஏதாவது ஒரு பறவையை காகமாக எண்ணி உணவை வைக்கிறார்கள். உதாரணமாக சிங்கப்பூரில் புறாவை காகமாக எண்ணி சாதம் வைக்கிறார்கள். அங்கு காகம் கிடையாது. காகம் இருக்குமிடத்தில் உணவை எடுக்காவிட்டால் தோஷம் தான். கொஞ்சம் சிரமப்பட்டு தேடிச் சென்று உணவை வையுங்கள்.