Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நிரந்தர நீதிபதி! உழைப்பைப் பற்றி பைபிளில் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சொத்து கையை விட்டு போகாமல் இருக்க வழி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஏப்
2016
04:04

தன் ஒரே மகனுக்கு பிறந்தநாள் பரிசாக தந்தை ஒரு தங்கப் பொம்மையை பரிசளித்தார். மகனே! வாழ்க்கையில் எதைத் தொலைத்தாலும் இதை தொலைத்து விடாதே. ஏதாவது சிரமம் ஏற்பட்டால், இந்த பொம்மையின் மதிப்பு உயர்ந்து அப்போது உனக்கு கைகொடுக்கும், என்றார். சில காலத்துக்குப் பின் அவர் இறந்து விட்டார். அந்த மகனும் தங்கப் பொம்மையை கண்ணுக்கு ஈடாகப் பாதுகாத்து வந்தான். ஒருநாள் தனது பண்ணைக்குச் சென்று விட்டு திரும்பியவன், பொம்மை இருந்த பெட்டகத்தை திறந்தான். உள்ளே பொம்மையைக் காணவில்லை. யாரோ அதை திருடிவிட்டது தெரிந்தது. அவன் மிகவும் வேதனைப்பட்டான். அந்த நினைப்பிலேயே பண்ணை வேலைகளை மறந்தான். ஒரு கட்டத்தில் பெரும் நஷ்டமாகி பண்ணையை விற்றுவிட்டான். ஒருநாள் ஒரு கிராமத்துக்குச் சென்றான். அங்கிருந்த விவசாயக் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதைப் பார்த்தான். அந்த வீட்டுப் பெரியவர் தன் மகன்களிடம், மக்களே! நீங்கள் இன்றிருக்கும் நிலம், பொருள் ஆகியவற்றை நம்பாதீர்கள். இவை ஏதோ ஒரு காரணத்தால் நம் கையை விட்டுப் போய்விடும் நாள் வரலாம். உழைப்பே என்றும் நிஜமானது. அது என்றைக்கும் சோறு போடும். நாம் பல பண்ணைகளின் எஜமானர்கள் என்பதற்காகவும், செல்வம் இருக்கிறதே என்பதற்காகவும் வயலுக்குள் இறங்கி உழைக்க தயங்கக்கூடாது. ஒருவேளை இந்த செல்வங்கள் நம்மை விட்டுப் போய்விட்டாலும் உழைப்பு உங்களை கைவிடாது, என்றார். அவர்களும் அப்படியே செய்வதாக வாக்களித்தனர். இதைக்கேட்ட அந்த மகன், தனது தந்தையும் தனக்கு தங்கப் பொம்மைக்கு பதிலாக இத்தகைய அறிவுரையைத் தந்திருந்தால், தனது செல்வம் பறிபோயிருக்காதே என்று ஆதங்கப்பட்டான். ஆம்...உழைப்பு மட்டுமே நமது நிரந்தரச் சொத்து. மற்றவையெல்லாம் சூழ்நிலைகளால் அழியக்கூடியவை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar