*வேலை செய்ய விரும்பாதவன் சாப்பிடவும் விரும்பாதிருக்கட்டும். *உழைப்பாளி அவமானப்படத் தேவையில்லை. *உண்மையில் அறுவடை செய்ய வேண்டியதோ ஏராளமாயிருக்கிறது. ஆனால், வேலையாட்களோ வெகுசிலர் தான் இருக்கிறார்கள். (பணிகள் ஏராளமாக இருந்தும் யாரும் வேலை செய்ய விரும்புவதில்லை என்பது இதன் பொருள்) *உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக. *உழைக்கும் குடியானவனே விளைச்சல் கனிகளில் முதல்பங்கு பெற வேண்டும். *போரடிக்கிற மாட்டிற்கு வாயைக் கட்டாதே. (உழைப்பவர்க்கு சரியான கூலியைக் கொடு என்று அர்த்தம்) *உழைப்பாளி தன் வெகுமதிக்கு தகுதியானவனாகிறான்.