பதிவு செய்த நாள்
18
ஏப்
2016
12:04
புதுப்பட்டு : புதுப்பட்டு, பாஞ்சாலி அம்மன் கோவிலில், வரும் 22ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு அடுத்த, புதுப்பட்டில், பாஞ்சாலி அம்மன் கோவில் உள்ளது. இங்கு, வரும் 22ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. முன்னதாக, 20ம் தேதி, காலை 9:00 மணிக்கு, மகா கணபதி ஹோமமும், நவக்கிரக ஹோமமும், கோ பூஜையும் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு, கரிக்கோலமும், மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தியும், பிரவேச பலி மற்றும் முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். மறுநாள், 21ம் தேதி, காலை 8:30 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், புதிய பிம்பங்கள் கண் திறத்தலும், காலை 11:00 மணிக்கு, புதிய பிம்பங்கள் பிரதிஷ்டையும், மாலை 5:00 மணிக்கு, மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெறும்.
தொடர்ந்து, 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு, நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதியும், 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் கோபுர விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகமும், அதை தொடர்ந்து பாஞ்சாலி அம்மன் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெறும். பகல் 1:00 மணிக்கு, பாஞ்சாலி அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறும். மாலை 5:00 மணிக்கு, கோவில் வளாகத்தில் திரவுபதி அம்மனுக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து மலர் அலங்காரத்தில், அம்மன் வீதிஉலாவும் நடைபெறும்.