பதிவு செய்த நாள்
19
ஏப்
2016
11:04
குன்னுார் : குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூகுண்டம் இறங்கினர். குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில், கடந்த, 3ம் தேதி சித்திரை தேர்த்திருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான, 42வது ஆண்டு பூகுண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, காலை பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலுக்கு கரக ஊர்வலம் நடந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடந்தன. பிறகு கோவிலில் இருந்து அம்மன் திருவீதி உலா துவங்கி, மீண்டும் வி.பி., தெரு பூகுண்டம் மைதானத்தை அடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடத்திய பிறகு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக பூகுண்டம் இறங்கினர். இதில், கைகுழந்தைகளை சுமந்தபடி தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். இதில், ஆயிரக்கணக்கான திருவிழாவில், பங்கேற்றனர். மத நற்பணி மன்ற நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். தேர்தல் நேரத்தில் களை கட்டியது.