பதிவு செய்த நாள்
19
ஏப்
2016
12:04
அவிநாசி : அவிநாசி, காந்திபுரம் காமாட்சியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, பக்தர்கள் பறவை காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர். இக்கோவிலில் கடந்த வாரம் சாட்டு பூஜை நடைபெற்றது. தினமும் காலை மற்றும் மாலையில், அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடைபெற்றது. நேற்று காலை, கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். நேர்ந்து கொண்ட பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், முகத்திலும், முதுகிலும் வேல் குத்தியும், நான்கு ரத வீதிகளில், ஊர்வலமாகச் சென்றனர். காந்திபுரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.
* வ.உ.சி., திடலில் உள்ள காமாட்சியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்றது. அம்மனுக்கு தினமும் பூஜை வழிபாடுகள் நடந்தன. நேற்று காலை, பொங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. பின், சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.