பதிவு செய்த நாள்
19
ஏப்
2016
12:04
பொன்னேரி: கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், நாளை பிரம்மோற்சவ விழா துவங்குகிறது. பொன்னேரி, திருவாயற்பாடியில் உள்ள சவுந்தர்யவல்லி தாயார் சமேத கரிகிருஷ்ண பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழா, நாளை, செல்வர் திருக்கூத்து நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. தொடர்ந்து, இம்மாதம், 22ம்தேதி கொடியேற்றம், 26ம் தேதி, கருடோற்சவம் (சந்திப்பு திருவிழா), 28ம் தேதி, ரத உற்சவம் (தேர் திருவிழா), ஆகியவை என, மே மாதம், 3ம் தேதி வரை, 14 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது.