திருமங்கலம்: திருமங்கலத்தில் மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு திருமாங்கல்யம் தயார் செய்யப்பட்டதாக புராணத்தில் உள்ளது. இங்கு மாங்கல்யத்திற்கு புகழ்பெற்ற பழமை வாய்ந்த மீனாட்சி அம்மன் திருக்கோயிலில், மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. சொக்கநாதர் வெண்பட்டும், மீனாட்சி பச்சை பட்டு உடுத்தியும் மணக்கோலத்தில் காட்சியளித்தனர். சங்கர் பட்டர், சங்கர நாராயண பட்டர் நிகழ்ச்சியை நடத்தினர். விழா ஏற்பாட்டை நிர்வாக அதிகாரி மாலதி செய்திருந்தார்.