மானாமதுரை: மானாமதுரையில் சித்திரை திருவிழாவின் ஒன்பதாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் ஆலய சித்திரை திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி பல்வேறு மண்டகப்படிதாரர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்பதாம் திருவிழாவான தேரோட்டம் நேற்று காலை 10.10 மணிக்கு தொடங்கியது.முன்னதாக அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சோமநாதர் பிரியாவிடை தாயாருடன் எழுந்தருளினார். சிறிய தேரில் ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளினார்.முன்னதாக சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 10.10க்கு தேர் நிலையை விட்டு கிளம்பியது.