அன்னுார்: அன்னுார் கருப்பராயன் கோவிலில், 22ம் தேதி மகா சண்டி ஹோமம் நடக்கிறது. தமிழ் புத்தாண்டில், சில ராசிகளுக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. இதையடுத்து, பல கோவில்களில் சிறப்பு ஹோமங்கள் நடக்கின்றன. குன்னியூர், கைகாட்டி கருப்பராயன், மாசானியம்மன் கோவிலில், வரும், 22ம் தேதி பகல், 3:00 மணிக்கு மகா சண்டி ஹோமம் நடக்கிறது. இதில் பரிகாரம் செய்ய வேண்டிய பக்தர்கள் பங்கேற்று பயன்பெறலாம். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 7:00 மணிக்கு இங்கு அருள்வாக்கு கூறப்படுகிறது.