திருச்சிக்கு அருகே ஆலந்தூரில் உள்ளது மயிலாயி அம்மன் திருக்கோயில். இக்கோயிலில் வைஷ்ணவி தேவிக்கு பதிலாக அவளது அம்சமாக மயிலாயி என்கிற பெயரில் தேவியை இருத்தி பக்தர்கள் வழிபடுகின்றனர். கருவறையில் சப்த கன்னியர் ஒரே வரிசையில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா நடக்கிறது. அப்போது காவிரிலிருந்து பால் குடம் எடுத்து வருவது, பூக்குழி இறங்குவது என பக்தர்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள். தம்மை வழிபடுவோர்க்கு செல்வங்களை வாரி வழங்குவதால் இத்தேவியை மகாலட்சுமியின் அம்சம் என்றும் சொல்கிறார்கள்.