தொட்டியம் -முசிறி பாதையில் உள்ளது மகேந்திர மங்கலம். காஞ்சி காமகோடி பீடத்தில் அருளும் சந்திரமவுலீஸ்வரரும் திரிபுரசுந்தரியும் அதே பெயர்களில் இங்கும் அருள்பாலிக்கின்றனர். காஞ்சி மகாபெரியவர் பாலகனாக இருந்தபோது இத்தலத்தில் வேதங்களைக் கற்று ஜபம் செய்தார். பீடாதிபதியான பிறகும் தொடர்ந்து மூன்று சாதுர்மாஸ்ய விரதங்களை இங்கே மேற்கொண்டார் என்பது இத்தலத்தின் சிறப்பு.