இலங்கையில் தமிழ் - சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவம் புது வருடப் பிறப்பு. இது ஒரு தேசியப் பெருவிழா. சித்திரை பிறந்ததுமே இளவேனில் காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அப்போது வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூக்கும். நம் வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்ததே என்பதைக் காட்டும் அம்சம் இது என்பர்.