முசிறி அருகே குணசீலத்தில் உள்ளது பிரஸன்ன வேங்கடாசலபதி திருக்கோயில். இக்கோயிலில் தாயாருக்கு சன்னிதி கிடையாது. மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல பெருமாளை வழிபட குணமாகிறது. சித்த பிரமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலை, மாலை சுவாமியின் தீர்த்தப் பிரசாதம் தரப்படுகிறது. மேலும், நண்பகல், இரவில் அவர்களை சுவாமி சன்னிதியில் அமர வைத்து பூஜை செய்வதோடு, சுவாமியின் அபிஷேக தீர்த்தத்தை இவர்களின் முகத்தில் தெளிக்கிறார்கள். ஒரு மண்டலம் இவ்வாறு செய்ய சித்த பிரமை நீங்கும் என்பது ஐதீகம்.