Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவந்திக் காப்பு தலம் ஒன்று, மூர்த்திகள் மூன்று!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஞான சரஸ்வதியின் பதினாறு திருநாமங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஏப்
2016
05:04

கும்பகோணம் திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயிலில் வீணை ஏந்தியபடி அருளும் கலைவாணி, தன் நாயகனைப் போன்றே நான்கு முகங்களுடன் தரிசனம் தருகிறாள். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில், சுவாமி சன்னிதிக்கு அடுத்துள்ள பிராகாரத்தில் சரஸ்வதிக்குத் தனிச் சன்னிதி உள்ளது. சரஸ்வதி பூஜையன்று இந்தச் சன்னிதிக்குள் ஏராளமான வீணைக் கலைஞர்கள் அமர்ந்து வீணையை இசைத்து வழிபடுகின்றனர். சென்னை, தியாகராயநகர், தபால் நிலையத்துக்கு அருகில் உள்ள அனுக்கிரக விநாயகர் கோயிலில், பளிங்கால் ஆன சரஸ்வதிதேவி சிலை உள்ளது. சிலை வட இந்தியப் பாணியில் இருந்தாலும் பூஜை வழிபாடெல்லாம் தமிழ் சம்பிரதாயப்படிதான். பாஸ்போர்ட்டுக்கு மனு செய்பவர்கள் இந்த சரஸ்வதியை வழிபட்டுவிட்டுத்தான் தபால் மூலம் அனுப்புவார்கள். அவ்வாறு செய்தால் பாஸ்போர்ட் விரைவில் கிடைக்கும் என்று நம்பிகை!

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயிலில்  சோபனப்படிக்குக் கீழே சரஸ்வதியின் திருஉருவம் அமைந்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில், பரவூர் என்ற இடத்தில் (எர்ணாகுளத்திலிருந்து 25 கி.மீ.) வெண்தாமரை பூத்துக் குலுங்கும் சதுர வடிவமான ஒரு குளத்தின் மையத்தில் உள்ளது கோம்பிகா எனும் சரஸ்வதி கோயில் தட்சிண மூகாம்பிகை என்றும் இதை அழைக்கிறார்கள். பாலக்காடு அருகில் உள்ள கொடுத்திரப்புன்னி ஆதிகேசவப் பெருமாள் கோயிலில், சரஸ்வதி பூஜையன்று நவமி விளக்குத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் கோயில் முழுக்க விளக்குகள் ஏற்றப்பட்டு, யானைகள் ஊர்வலம் செல்வது கண்கொள்ளாக் காட்சி. திருச்சி அருகேயுள்ள பிட்சாண்டார் கோயிலில், பிரம்மனைப் போலவே சரஸ்வதிக்கும் தனிச் சன்னிதி உள்ளது. ஞான சரஸ்வதியான இவள் வீணை இல்லாமல், கையில் ஓலைச் சுவடியோடும் ஜபமாலையோடும் காட்சியளிக்கிறாள்.

வேலூர்- கிருஷ்ணகிரி பாதையில் உள்ள வாணியம்பாடியில், கோயிலின் முகப்பிலேயே சிவ பார்வதியை கலைவாணி வழிபடும் சுதைச் சிற்பம் உள்ளது. தனிச் சன்னிதியில் வீணை ஏந்திய வாணி அருள்கிறாள். காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில், எட்டுக் கரங்கள் கொண்ட சரஸ்வதியைக் காணலாம். இந்தத் தேவியை சியாமளா என்று அழைப்பர். சியாமா, சியாமளா, மந்திரிநாயகி, மந்திரிணி, சுகப்ரியா, சசிவேசாணி, பிரதாநேசி, கதம்பேசி, கதம்பவாசினி, சதாமதா, சங்கீதயோகினி, வீணாவதி, வைணிகி, முத்திரணி, பிரியகப்ரியா, நிபப்ரியா எனப் பதினாறு திருநாமங்களால் சரஸ்வதியை அழைக்கிறது லலிதோபாக்யானம். பாரதி, சாரதாதேவி, ஹம்சவாகினி, ஜகநி, புத்திதாத்ரி, வாணீஸ்வரி, வரதாயினி, க்ஷக்ரகண்டி, புவனேஸ்வரி, கவுமாரி, பிரம்மசாரிணி ஆகியவை சரஸ்வதிக்கு வேறு பெயர்கள். பொதுவாக, சரஸ்வதியின் வாகனமாக அன்னப் பறவை திகழ்கிறது. ஆனால், மும்பை மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மயில் மீது அமர்ந்திருக்கும் சரஸ்வதியைக் காணலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar