கேரள எல்லையை ஒட்டி தமிழக எல்லையில் அமைந்திருக்கிறது கூடலூர். தேனியில் இருந்து குமுளி செல்லும் வழியில் சுமார் 45 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகள் ஒன்றுகூடும் இடம் ஆதலால் கூடலூர் என்று பெயர் பெற்றது. மலைகளின் சங்கமத்தை மட்டுமல்ல மகாமூர்த்திகள் மூவரையும் இவ்வூரில் தரிசிக்கலாம்.