கூடல் சுந்தரவேலவர் கோயிலில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் அமைந்திருக்கிறது அருள்மிகு சீலையசாமி சிவன் கோயில். இந்தக் கோயிலில் பொங்கு சனிபகவானைத் தரிசிக்கலாம். நான்கு திருக்கரங்களுடன் நின்ற நிலையில் தனிச் சன்னிதியில் காட்சியளிக்கும் இந்த சனீஸ்வரருக்கு எதிரில் அவரை வணங்கியபடி நள -தமயந்தி தம்பதியினர் காட்சி தருகின்றனர். சனிக்கிழமைகள் அல்லது அவரவர் நட்சத்திர நாட்களில் இந்த கோயிலுக்கு வந்து, இவருக்கு எள் தீபம் ஏற்றி, கறுப்பு நிற ஆடை சமர்ப்பித்து வழிபடுகிறார்கள் பக்தர்கள். இதனால் வாழ்வில் நன்மைகள் பொங்கும், வளம் பெருகும் என்கிறார்கள்.