தாரமங்கலம் கயிலாசநாதர் திருக்கோயிலில் அம்மன் சன்னிதி வாயிலின் மேல் விதானத்தில் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பம் உள்ளது. அழகான வேலைப்பாடுகள் கொண்ட தாமரை மலரை கிளிக் கூட்டங்கள் சூழ்ந்திருக்கும் காட்சியை நயமுடன் செதுக்கி அனைவரையும் வியப்புடன் ரசிக்க வைத்த சிற்பி, பார்ப்பர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். தாமரை மலரின் நடுவில் இருக்கும் மொக்கைச் சுற்றி கல் வளையம் ஒன்று செதுக்கியுள்ளார். அந்தக் கல் வளையத்தை கீழிலிருந்து ஒரு மூங்கில் கழி கொண்டு தள்ளிவிட்டால், தாமரை மொக்கைச் சுற்றிச் சுழன்று வருகிறது. மொக்கைச் சுற்றிலும் வளையத்தைச் செதுக்கி எவ்வளவு சிறிய உளி கொண்டு பொறுமையாக அதைத் தனிமைப்படுத்திச் சுழல வைத்திருப்பார்கள் சிற்பி. அவரின் அந்தப் பொறுமையும் அர்ப்பணிப்புடன் கூடிய வேலைப்பாடும்தான் இன்றும் அவரை நினைத்துப் போற்ற வைக்கிறது.