Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநி பெருமாள் கோயிலில் சித்திரை ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்த சுவாமி கோவில் சித்திரை மாத வசந்த உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஏப்
2016
12:04

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், சித்திரை மாத வசந்த உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதுபோல், இந்த ஆண்டுக்கான உற்சவம், 17ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்து தொடர்ந்து, ஐந்து நாட்கள் உற்சவ மூர்த்தியான கந்தசுவாமி பெருமான், வள்ளி, தெய்வானையுடன், கோவிலுக்கு அருகாமையில் உள்ள வசந்த மண்டபத்தில் காலை வேளையில் எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சோடச தீபாராதனைகள் நடைபெற்று, மீண்டும், இரவு, 7:30 மணிக்கு கோவிலை வந்தடைவார். இறுதி நாளான நேற்று, சுவாமிக்கு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்று, மாட வீதிகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் பொருள் ஆண்டுதோறும், அர்ச்சனைக்குத் தேவையான மலர்களையும், இலைகளையும் கொடுக்கும் விருட்சங்கள், சுவாமியை தங்களுக்கு அருகிலேயே பார்ப்பதற்காக, சுவாமி, பூந்தோட்டங்களில் எழுந்தருளி, விருட்சங்களுக்கு காட்சி தருவதே வசந்த உற்சவம்.இந்த ஐதீகம், காலம், காலமாக பின்பற்றப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ... மேலும்
 
temple news
ஐப்பசி மாதம் என்பது விசேஷமான மாதம். இந்த மாதத்தில் வருகிற பிரதோஷம் மகத்துவமானது. பிரதோஷ தினத்தில் இஷ்ட ... மேலும்
 
temple news
தென்காசி: தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா, மங்கல இசை, பஞ்ச வாத்தியங்கள், ... மேலும்
 
temple news
மகாபாரதம், அர்த்தசாஸ்திரம், ராஜதரங்கிணி நூல்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: புதுடெல்லி: இந்தியாவின் ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் துவாதசி திதியை முன்னிட்டு கோவை கொடீசியா திருப்பதி வெங்கடாஜபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar