ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் ரூ.70.81 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2016 12:04
பொள்ளாச்சி: ஆனைமலை மாசாணி யம்மன் கோவிலில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டன. பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், ஒன்பது தட்டு காணிக்கை, 16 நிரந்தர பொது உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கோவை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். கோவில் உதவி ஆணையர் கார்த்திக் முன்னிலை வகித்தார். இதில், ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்களில், 16 லட்சத்து 96 ஆயிரத்து 672 ரூபாயும், 16 நிரந்தர பொது உண்டியல்களில், 53 லட்சத்து 85 ஆயிரத்து 23 ரூபாயும் வசூலாகியது. தங்கம் 382 கிராமும், வெள்ளி 465 கிராமும் இருந்தது.