திருவண்ணாமலை அரியாத்தம்மன் கோவிலில் 1,008 பால்குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2016 12:04
திருவண்ணாமலை: ஆரணி அரியாத்தம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு நேற்று முன்தினம், சிறப்பு அபி ேஷகம் மற்றும் பூஜை நடந்தது.தொடர்ந்து, 1008 பால்குட ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, புதுக்காமூர் கமண்டல நாகநதி கரையோரம் உள்ள பெரியநாயகி உடனுறை புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலை அடைந்தது. அங்கு சுவாமிக்கு, பாலாபி ேஷகம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது. பின், சிறப்பு யாகமும், அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூர்த்திகள் திருவீதி உலாவும் நடந்தது.