திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், திரிபுரசுந்தரி உடனுறை வேதகிரீஸ்வரர் கோவிலின் மலையடிவார திருப்பணி உண்டியலில், 1.50 லட்ச ரூபாய் சேர்ந்துள்ளது. இங்குள்ள கோவில்களின் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை பணம், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, செயல் அலுவலர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் எண்ணப்படும். அதன் படி, மலையடிவார கோவில் திருப்பணி உண்டியல் நிரம்பியதால், உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அதில், 1 லட்சத்து, 50 ஆயிரத்து, 799 ரூபாய் இருந்தது.