பதிவு செய்த நாள்
30
ஏப்
2016
12:04
திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோவிலில், உண்டியல் காணிக்கையாக, 89.39 லட்சம் ரூபாய் வசூலானது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்வர். கோவிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் எண்ணப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் காலை, முதல் இரவு, 9 மணி வரை, உண்டியல் எண்ணப்பட்டது. பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில், 89.39 லட்சம் ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 98 கிராம் தங்கம், 1,135 கிராம் வெள்ளி ஆகியவை, காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.