திருக்கோவிலூர் - விழுப்புரம் பேருந்து மார்க்கத்தில் அரகண்டநல்லூரில் அமைந்துள்ளது, மலையமான் திருமுடிக்காரி என்ற மன்னரால் கட்டப்பட்ட அதுல்யநாதேஸ்வரர் கோயில். இங்குள்ள இறைவனை ரமண மகரிஷி ஜோதி வடிவத்தில் தரிசித்ததாகச் சொல்லப்படுகிறது. திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற இத்தலத்தில் பாண்டவர்கள் தவமிருந்து சிவபெருமானை வழிபட்டுள்ளனர். இங்கு பாண்டவர் தீர்த்தம், பாண்டவர் மலைக்குன்றும் உள்ளது.