சென்னை மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் மகரசங்கராந்தியன்று சந்திரசேகர சுவாமி திருவீதி உலா வருவார். மறுநாள் மாட்டுப் பொங்கலன்று கற்பகாம்பாள் கன்னி உற்சவமும், காலையில் குளக்கரையில் கற்பகாம்பிகைக்கு விசேஷ அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறும். மறுநாள் சந்திரசேகரசுவாமி பரிவேட்டை உற்சவம் நடைபெறும்.