போர் புரிவதில் சேவல் சிறந்த பறவையாகும். போரில் வல்லவரான முருகப்பெருமான் அதைத் தன் கொடியாக ஏற்றுக் கொண்டார். குறிஞ்சி நிலத்தின் தலைவன் முருகக்கடவுள். மலைகள் இவனுடைய சொந்தமாகும். மலையில் உலவும் மயில் இவனுடைய வாகனமாகும். முருகனின் மயிலை சுத்தமாயை என்பார்கள். மயிலின் வாயில் உள்ள பாம்பை அசுத்த மாயை என்பார்கள். மயிலின் காலில் உள்ள பாம்பை பிரகிருதி என்றும், குண்டலினி சக்தி என்றும் கூறுவார்கள். அதை மயில் அடக்குவதாக ஐதிகம்.