பதிவு செய்த நாள்
05
மே
2016
12:05
மகுடஞ்சாவடி: சித்தர்கோவிலில், சித்தர் திருவிளையாடல் நேற்று நடந்தது. இளம்பிள்ளை அருகே, சித்தர்கோவிலில், சித்தர் சிறப்பு திருவிழா நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான நேற்று, சித்தர் திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில், குறிப்பிட்ட குடும்பத்தை சேர்ந்த ஒருவர், விரதமிருந்து சித்தர்போல் வேடமிட்டு வந்தார். அவரை, துண்டு மற்றும் சந்தனகட்டையால் அடித்து, எப்போது மழை வரும் என்று, ஒருவர் கேட்டார். அப்போது, 7 நாட்களில் மழை வரும் என, அவர் கூறினார். அருகில் உள்ள, காளியம்மன் கோவிலில் தீமிதி விழாவும் நடந்தது. அதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு, தீ மிதித்தனர்.