எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் அருகே, மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த, அணைப்பாளையத்தில் கணபதி, மாரியம்மன், காளியம்மன், மதுரைவீரன், கன்னிமார் கோவில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது. முன்னதாக நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. பக்தர்கள் பூஜைக்கு தேவையான பால், தயிர், பசுநெய், இளநீர், புஷ்பம் முதலியவற்றை அன்பளிப்பாக அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தனர்.