அவிநாசி: அவிநாசி சுந்தரமூர்த்தி நாயனார் பொதுநல அறக்கட்டளை சார்பில், தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறை இசை நிகழ்ச்சி, நேற்று நடைபெற்றது. ஆட்டையாம்பாளையம், ஏ.ஆர்.கிருஷ்ணா மஹாலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். அறக்கட்டளை அடியார்கள், தேவராம், திருவாசகம் பாடல்களை பாடினர். முன்னதாக, சிவபூஜை வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன. அவிநாசி, பூண்டி பகுதிகளை சேர்ந்த சிவனடியார்கள் பங்கேற்றனர்.