புதுச்சேரி: உழவர்கரை ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழா நேற்று தொடங்கியது. பேராயர் ஆனந்தராயர் காலை 6.30 மணி திருப்பலிக்கு பின் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார். நவநாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு திருப்பலி, மறையுரை, சிறிய தேர்பவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது. அருட் தந்தையர்கள் பால், மார்ட்டின் அந்தோணி, யூஜின், சதீஸ்குமார், டோமினிக் சாவியோ, அலெக்சாண்டர், லெனின் ஆண்ட்ரூஸ், ஆகியோர் மறையுரையாற்றுகின்றனர். ஆண்டு பெருவிழா 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. காலை 6.30 மணிக்கு முதன்மை குரு அருளானந்தம் திருப்பலி நிறைவேற்றுகிறார். மாலையில் வீதிகளில் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை பொன்.அந்தோணிசாமி தலைமையில் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.