திருவாடானை: தொண்டியில் தூயசிந்தாதிரை அன்னை ஆலய திருவிழா ஏப்., 29ந் தேதி துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு தேர்பவனி நடந்தது. தூயசிந்தாதிரை அன்னை சொரூபத்துடன் தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.