மங்கலம்பேட்டை: சின்னவடவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா இன்று நடக்கிறது. மங்கலம்பேட்டை அடுத்த சின்னவடாவாடி திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 26ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று (13ம் தேதி) காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 10:00 மணிக்கு அரவாண் களபலி, முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.