சீர்காழியிலுள்ள திருவிக்ரமன் கோயிலில் வித்தியாசமான வழிபாடு ஒன்று நடைபெறுகிறது. வீடுகட்ட ஆரம்பிக்கும் முன்பு பக்தர்கள் மணலை வைத்து இத்தலத்தில் பூஜை செய்கின்றனர். மகாபலி மன்னனிடம் மூன்றடி நிலம் கேட்ட பெருமாள் என்பதால், இவரிடம் நிலம் தொடர்பான பிரச்னைகள் தீர வேண்டிக்கொண்டால் அவை நிவர்த்தி அடைவதாகவும்,, வாஸ்து தோஷங்கள் நீங்குவதாகவும் நம்பிக்கை.